கார்ஸ் குரூப் கம்பெனி சார்பாக கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 13 அணிகள் பங்கேற்றன. இப்போட்டிகள் வியாழன் மாலை சுமார் 5 மணிக்கு தொடங்கி அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இப்போட்டியில் ஷார்ஜா, துபாய், RAS AL KHAIMAH , FUJAIRAH , AL QUOZ , AL QUASIS , ஆகிய அணிகள் பங்கேற்றன. மொத்தம் 12 போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து அணிகளும் சிறப்பாக விளையாடின. இறுதிப் போட்டியில் SHARJAH மற்றும் RAS AL KHAIMAH அணிகள் விளையாடின. RAS AL KHAIMAH அணியின் பந்து வீச்சில் ஷார்ஜா அணி விக்கெட்டுகள் மளமளவென இழந்தது. அந்த அணி 10 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. பின்னர் களமிறங்கிய RAS AL KHAIMAH அணி சிறப்பாக விளையாடி 9 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.இறுதியில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி RAS AL KHAIMAH அணி கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கும் மற்றும் அணியை சிறப்பாக வழி நடத்தி சென்ற அதன் ஒருங்கிணைப்பாளர் அவர்களுக்கும் கார்ஸ் கம்பெனி தங்களது வாழ்துக்களை தெரிவித்துக் கொண்டது. மேலும் கார்ஸ் RAS AL KHAIMAH மேலாளர் ஜனாப்.I .ஹபிபுல்லாஹ் அவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இவன்: ஆசிரியர்(மணற்கேணி டைம்ஸ் )





0 comments: on "ரச அல் க்ஹைமாஹ் ஜன15 : ரச அல் க்ஹைமாஹ் கார்ஸ் கிரிக்கெட் அணி கோப்பையை தட்டிச் சென்றது"
Post a Comment