அல் கலீல் மாவட்டத்தின் பெய்ட் உம்மார் கிராமத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பிரிவினைச் சுவருக்கு எதிராய் இடம்பெற்ற வாராந்த அமைதிப் பேரணியின் போது இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினர் தடாலடியாகப் பிரவேசித்துத் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இவர்களின் அத்துமீறிய தாக்குதலின்போது அமைதிப் பேரணியினர்மீது கைக்குண்டுகள் மற்றும் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் எறியப்பட்டன. இதனால், பேரணியில் கலந்துகொண்ட பலஸ்தீனர்களும் வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்கள் சிலரும் படுகாயமுற்றனர். மற்றும் பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர்.
பலஸ்தீன் ஒருங்கிணைப்புக் கழகத்தின் பேச்சாளர் முஹம்மத் அவாத் கருத்துரைக்கையில், அமைதியான முறையில் இடம்பெற்ற எதிர்ப்புப் பேரணியை இடைமறித்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை அடாவடித்தனமாக வன்முறையில் இறங்கியதோடு, பேரணியைக் கலைக்குமுகமாகத் தாக்குதல் மேற்கொண்டது என்று தெரிவித்துள்ளார்.
0 comments: on "அமைதிப் பேரணியினர் மீது இஸ்ரேலிய அடாவடி"
Post a Comment