புதுதில்லி, டிச.27: மசூதி குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தீவிரவாத ஆர் எஸ் எஸ் தலைவர் இந்தரேஷ் குமாரிடம் மத்திய புலனாய்வுத் துறை மீண்டும் விசாரணை நடத்தும் எனத் தெரியவந்துள்ளது. வங்கிக் கணக்கு விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை அளிக்குமாறு இந்தரேஷ் குமாரிடம் சிபிஐ கேட்டிருந்தது. அதன் நகல்களை குமார் அளித்தார். சிபிஐ கேட்டுள்ள இதர ஆவணங்களை அளித்த பின்னர் அவர் விசாரணைக்காக மீண்டும் அழைக்கப்படுவார் எனத் தகவல்கள் தெரிவித்தன. 2007-ம் ஆண்டு ஹைதராபாத் மசூதியில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 9 பேர் உயிரிழந்தனர். 70 பேர் காயமடைந்தனர்.



0 comments: on "குண்டுவெடிப்பு வழக்கு: ஆர்எஸ்எஸ் தலைவரிடம் மீண்டும் விசாரணை."
Post a Comment