வாஷிங்டன்,டிச.22: விக்கி லீக்ஸ் இணையதளம் வெளியிட்ட ரகசியத் தகவல்களால் பிற நாடுகளுடனான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை ஆராய அமெரிக்க உளவுத் துறை (சிஐஏ) முடிவெடுத்துள்ளது.
இதற்காக சிஐஏ சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. இக்குழுவில் உளவுத் துறையை சேர்ந்த 24 உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
விக்கி லீக்ஸ் முன்னதாக வெளியிட்ட தகவலைவிட அண்மையில் வெளியிட்ட தகவல்களால்தான் பிற நாடுகளுடனான உறவு பாதித்திருக்க வாய்ப்புள்ளதாக சிஐஏ நம்புகிறது. இதனால் சமீபத்திய தகவலுக்கு முன்னுரிமை அளித்து ஆராய திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்கா, பிற நாடுகளுடன் பரஸ்பர நலத்தின் அடிப்படையில் உறவு வைத்துள்ளது. இதனால் விக்கி லீக்ஸ் வெளியிட்ட தகவலால் பிற நாடுகளுடனான அமெரிக்க உறவு பாதிக்கப்படவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் குரோவ்லே கூறினார்.
அமெரிக்காவுடனான நட்பு நாடுகளின் தலைவர்களுடன் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.




0 comments: on "விக்கி லீக்ஸ் தகவலால் ஏற்பட்ட பாதிப்பு என்ன? ஆராய யு.எஸ். சிறப்புக் குழு"
Post a Comment