தலைப்புச் செய்தி

Thursday, December 23, 2010

ஊழல்வாதிகளுக்கு ஆன்லைனில் ஆப்பு

ஊழலை ஒழிப்பதற்கு ஒவ்வொரு குடிமகனும் தங்களால் ஆன இயன்ற பங்களிப்பை வழங்குவதற்கு வசதியாக மத்திய கண்காணிப்பு ஆணையகம் வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. http://www.vigeye.com/ என்ற இணைய தளம் மூலமாக ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றி புகார் செய்ய முடியும்.
 
ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் மூலமாக புகார் செய்யவும் இந்த இணையதளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் தங்களை பதிவு செய்பவர்கள் மட்டுமே புகார் அளிக்க முடியும். 20.12.2010 வரை இந்த தளத்தில் 1837 நபர்கள் தங்களை இணைத்துள்ளனர். 173 புகார்கள் இதுவரை பதியப்பட்டுள்ளது.
 
அலைபேசி மூலமாக பதிவு செய்ய விரும்புபவர்கள் VIGEYE என்று தட்டச்சு செய்து 09223174440 என்ற எண்ணுக்கு அனுப்பினால் பதிவு செய்வதற்கான இணைய தள முகவரி உங்கள் அலைபேசிக்கு அனுப்பப்படும்.
 
ஊழலை ஒழிக்க நீங்களும் தயாராகி விட்டீர்களா?

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஊழல்வாதிகளுக்கு ஆன்லைனில் ஆப்பு"

Post a Comment