தலைப்புச் செய்தி

Thursday, December 30, 2010

கோடி ரூபாய் மோசடி; வங்கி ஊழியர் கைவரிசை

அரியான மாநிலம் குர்கான் நகரில் சிட்டி வங்கியில் அதன் வங்கி ஊழியர் ஒருவர் 400 கோடி ரூபாய் மோசடி செய்து தனது பெயருக்கு பணத்தை மாற்றி உள்ளார். சிட்டி வங்கி வெளியிட்ட அறிக்கையில், குர்கான் கிளையில் கணக்குகளில் முறைகேடாக பணம் எடுக்கப்பட்டிருப்பது குறித்து விசாரித்ததில் இந்த நிதி மோசடி குறித்த விவரம் தெரிய வந்தது. சிவராஜ் பாட்டீல் என்ற ஊழியர் தான் இதைச் செய்துள்ளார்.


வாடிக்கையாளர்களிடம் கவர்ச்சிகரமான திட்டங்கள் இருப்பதாக கூறி 20 வசதியுள்ள வாடிக்கை யாள˜களிடமிருந்து ரூ. 400 கோடி வரை மோசடி செய்து சுருட்டியுள்ளார். சுருட்டிய அந்தப் பணத்தை வேறு சில கணக்குகளுக்கு மாற்றியுள்ளதை கண்டு பிடித்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. சிட்டி வங்கி அறிவித்துள்ளதாக கூறி இவரே மோசடியான திட்டங்களை அச்சிட்டு அதை வாடிக்கையாளர்களிடம் காண்பித்து முதலீடு செய்யத் தூண்டியுள்ள£ர்.

மேலும் போலியான நோட்டீஸ் ஒன்றை தயாரித்து அதை செபியினுடைய நோட்டீஸ் என்று ஏமாற்றி வாடிக்கை யாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றுள்ளார். சிட்டி வங்கி அளித்த புகாரை அடுத்து குர்கான் போலீசார் 420, 467, 468 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு விசாரித்து வருகின்றனர். சில வாரங்களுக்கு முன் வங்கிகடன் முறைகேட்டில் சிபிஐ அதிகாரிகள், எல்ஐசி வீட்டுவசதி நிறுவனத்தலைவர், சென்ட்ரல் வங்கி ஆடிட்டர், இந்தியன் வங்கி ஜெனரல் மேனேஜர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பலர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "கோடி ரூபாய் மோசடி; வங்கி ஊழியர் கைவரிசை"

Post a Comment