தலைப்புச் செய்தி

Tuesday, December 28, 2010

உயிரோடு சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மூதாட்டி


சா போலோ : பிரேசில் நாட்டில் இறந்ததாக அறிவிக்கப்பட்டு சவப்பெட்டியில் வைத்து மூடப்பட்ட மூதாட்டி உயிர் பிழைத்தார். ஆனால்,  அவர் 2 நாட்கள் கழித்து இறந்தார்.

மினாஸ் ஜெரியாஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் மரியா தாஸ் டோர்ஸ். வயது 88. உடல் நலக் குறைவாக மருத்துவமனையில் இருந்த அவர், கடந்த புதன்கிழமை இறந்ததாக டாக்டர் அறிவித்தார். அவரது உடலை சவப்பெட்டியில் வைத்து வீட்டுக்கு எடுத்து சென்றனர்.

புதைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அப்போது சவப்பெட்டி அசைந்தது. திறந்து பார்த்தபோது, மரியா உயிருடன் இருந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டார். ஆனால், வெள்ளிக்கிழமை இறந்தார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உயிரோடு சவப்பெட்டியில் வைக்கப்பட்ட மூதாட்டி"

Post a Comment