தலைப்புச் செய்தி

Thursday, December 30, 2010

தண்ணீருக்காக பாட்டில்களுடன் தெருவில் நிற்கும் பிரித்தானிய மக்கள் - சிறப்புப் பார்வை

கடந்த ஒரு மாதமாக நிலவி வரும் உறைபனியினால் வடக்கு அயர்லாந்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 8 நாட்களாக ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் கடுமையான சிரமத்தை அனுபவித்து வருவதாக கூறுகின்றனர் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த மக்கள்.

பூஜ்யத்திற்கும் குறைவான வெப்பநிலை தொடர்ந்து பல பகுதிகளில் நிலவி வந்ததால் பல இடங்களில் தண்ணீர் வரும் முக்கிய குழாய்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. அதைக் கண்டறிந்து சரி செய்ய முடியாத நிலையில் பொறியாளர்கள் இருப்பதால் தண்ணீர் முழுவதும் ஆங்காங்கே கசிந்து வீணாகி விட்டதாக அதிகாரிகள் குழு கூறுகிறது.

தொடர்ந்து இது போன்ற நிலைமை நீடித்து வருவதால் வடக்கு அயர்லாந்தில் வாழும் பல ஆயிரக்கணக்கான மக்கள் தண்ணீரின்றி தத்தளித்து வருகின்றனர். எங்காவது தண்ணீர் கிடைப்பதாக தெரிந்தால் பாட்டில்களில் அவற்றை நிரப்புவதற்காக எடுத்துக் கொண்டு ஓடும் அளவிற்கு மக்களின் நிலை மோசமாக உள்ளது.

பல நாட்களாக தண்ணீரின்றி தத்தளிப்பதால் இந்த பகுதிகளில் சுகாதார சீர்கேடும் பெருமளவில் உண்டாகியுள்ளது. நிலைமை சீரடைய மேலும் நான்கு நாட்கள் ஆகலாம் என்றும் அது வரையிலும் தற்போது இருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு தொடரும் என அதிகாரிகள் அறிவித்து விட்டனர்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தண்ணீருக்காக பாட்டில்களுடன் தெருவில் நிற்கும் பிரித்தானிய மக்கள் - சிறப்புப் பார்வை"

Post a Comment