தலைப்புச் செய்தி

Wednesday, December 29, 2010

சிறிய இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டமுடியாது - அசோக் சிங்கால்

மும்பையில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த தர்மசபையில் பேசிய அதன் சர்வதேசத் தலைவர் அசோக் சிங்கால், "அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விசுவ ஹிந்து பரிஷத் ஏற்கவில்லை என்று கூறியுள்ளார்.

  மேலும் பேசுகையில் “அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, மூன்றில் ஒரு பங்கு இடத்தில் ராமனுக்கு மிகப் பெரிய அளவில் கோயில் கட்ட முடியாது. கி.பி.1528ஆம் ஆண்டிற்கு முன்பு அங்கு ராமர் கோயில் இருந்தது என்று இந்திய தொல்லியல் துறை கூறியுள்ளது.
  ராமன் கோயிலிருந்த இடத்தில்தான் பாபர் மசூதி இருந்தென்பதை நீதிமன்றம் ஒப்புக்கொள்வதாயிருந்தால் அது சுன்னி வக்ப் வாரியத்தின் மனுவை நிராகரித்திருக்க வேண்டும்.பிறகு ஏன் சுன்னி வக்ப் வாரியத்திற்கு மூன்றில் ஒரு பங்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது?” என்று அசோக் சிங்கால் வினா எழுப்பினார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "சிறிய இடத்தில் ராமனுக்கு கோவில் கட்டமுடியாது - அசோக் சிங்கால்"

Post a Comment