தலைப்புச் செய்தி

Sunday, December 26, 2010

ஜிசாட்- 5பி செயற்கைக் கோள் வானில் வெடித்துச் சிதறியது

இந்தியாவின் அதிநவீன தொலைத் தொடர்புச் செயற்கைக்கோள் என்று கருதப்பட்ட ஜிசாட் - 5பி செயற்கைக்கோள் இன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் நடுவானில் வெடித்துச் சிதறியது.

ஏற்கனவே கடந்த வாரம் 20ம் தேதி விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்தது ஆனால் கவுண்டவுன் துவங்கும் போது திடீர் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது. கோளாறு சரிசெய்யப்பட்டு சனிக்கிழமை (25.12.2010) மாலை 4 மணி 1 நிமிடம் அளவில் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது.

ரூ.125 கோடி செலவில் உருவான இந்த செயற்கைக் கோள் 2,130 கிலோ எடை கொண்டது. இது 1999ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட இன்ஸாட் 2 - இ செயற்கைக்கோளுக்கு மாற்றாக ஏவப்பட்டது. ராகெட்டிலிருந்து சீறிக் கிளம்பிய ஜிசாட்- 5பி செயற்கைக்கோள் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தொடக்க நிலையிலேயே நடுவானில் வெடித்துச் சிதறியது.

ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் 2003ஆம் ஆண்டிலிருந்து 7 முறை விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 முறை தோல்வியில் முடிந்துள்ளது. இவ்வாண்டில் இது இரண்டாவது தோல்வியாகும். இதற்கு முன் ஜிசாட் - 4 செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடங்களிலேயே வங்காள விரிகுடாவில் எரிந்து விழுந்தது.

வழக்கமாக ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவுதலில் முதல் நிலையில் திட எரிபொருள் எரிக்கப்படும். இரண்டாவது நிலையில் திரவ எரிபொருள் பயன்படுத்தப்படும். மூன்றாம் நிலையில் திரவ ஹைட்ரஜன் மூலம் கிரயோஜெனிக் எஞ்ஜின் செயலாற்றும். இந்தக் கட்டத்தில்தான் தோல்வி ஏற்படும் சாத்தியக்கூறு உண்டு.ஆனால் இந்த ஜிசாட்- 5பி முதல் நிலையிலேயே தோல்வி தழுவியதால் இஸ்ரோ விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ஜிசாட்- 5பி செயற்கைக் கோள் வானில் வெடித்துச் சிதறியது"

Post a Comment