பி.பி.சி 1 அலைவரிசையில் ஒன் ஷோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த ஜசோன் மான்போர்ட் பதவி விலக இருப்பதாக கண்ணீர் ததும்பும் விழிகளுடன் அறிவித்துள்ளார். நகைச்சுவை உணர்வு மிக்க நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்ற வகையில் பிரிட்டனில் வசிக்கும் மக்களிடையே பிரபலமானவர் ஜசோன்.
சமூக வலைத்தளமான ட்விட்டர் மற்றும் ஸ்கைப்பில் இருக்கும் வீடியோ அழைப்பு வசதிகளை பயன்படுத்தி இதுவரை 12 இளம்பெண்களிடம் செக்ஸ் தொடர்பாக பேசி வந்துள்ளதாகவும், தற்போது தன் மனைவியை அது ஏமாற்றுவதாக இருப்பதை உணர்ந்து குடும்பத்துடன் நேரத்தை இனி இனிமையாகச் செலவிட முடிவு செய்து பதவி விலகவிருப்பதாக ஜசோன் பி.பி.சி க்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிற ஊடகங்கள் பி.பி.சி செய்தி நிறுவனத்திடம் கேட்ட போது ஜசோனின் முடிவை ஏற்றுக் கொண்டோம் என்பதை தவிர தங்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை என அந்நிறுவனம் அறிவித்து விட்டது. தன்னுடைய ரசிகைகள் பலருடன் ஜசோன் உல்லாச விடுதி அறைகளில் தங்கியுள்ளதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நீண்ட காலமாக காதலித்து வந்த கேத்ரின் என்பவரை ஜசோன் கடந்த ஆண்டு மணம் முடித்தார். தற்போது இவர் மனைவி எட்டு மாதக் கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இன்றிரவு ஒளிபரப்புவதற்காக தயாரிக்கப்பட்ட ஜசோனின் நிகழ்ச்சியை ஒளிபரப்பலாமா வேண்டாமா என பி.பி.சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
0 comments: on "பெண்களுடன் இண்டர்நெட் செக்ஸ் - பி.பி.சி " ஒன் ஷோ " தொகுப்பாளர் ஜசோன் மான்போர்ட் பகிரங்கம்"
Post a Comment