தலைப்புச் செய்தி

Saturday, November 20, 2010

மாலேகான் குண்டு வெடிப்புக் காவித் தீவிரவாதி சுவாமி ஆசிமானந்த் கைது!

மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படும் சுவாமி ஆசிமானந்தை சிபிஐ வெள்ளிக் கிழமையன்று கைது செய்தது.
சுவாமி ஆசிமானந்த் கடந்த இரண்டு நாள்களாக சிபிஐ மற்றும் ராஜஸ்தான் மாநில தீவிரவாத எதிர்ப்புப் படையினர் ஆகியோரின் தேடுதல் வேட்டையில் சிக்காமல் தப்பித்து வந்தார்.
குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிமானந்த் ஆசிரமம் நடத்தி வருகிறார். நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கும் இந்த ஆசிரமத்தில் வைத்தே திட்டம் தீட்டப்பட்டது என காவல்துறையினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தப் பகுதியில் பழங்குடியினருக்காக பள்ளி ஒன்றையும் ஆசிமானந்த் நடத்தி வருகிறார். கிறிஸ்தவ ஆதிவாசிகளை இந்து மதத்திற்கு மாற்றும் பணியையும் இவர் மேற்கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

காவித் தீவிரவாத நெட்வொர்க்கின் மூளையாகக் கருதப்படும் சுனில் ஜோஷியுடன் ஆசிமானந்துக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இராணுவ முன்னாள் அதிகாரி புரோஹித் மற்றும் பெண் சாமியார் சாத்வி பிரக்யா ஆகியோருடனும் ஆசிமானந்த்துக்கு தொடர்பு உள்ளதாகக் காவல்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "மாலேகான் குண்டு வெடிப்புக் காவித் தீவிரவாதி சுவாமி ஆசிமானந்த் கைது!"

Post a Comment