தலைப்புச் செய்தி

Sunday, November 14, 2010

தீவிரவாத செயலில் கைதான இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்-திக்விஜய் சிங்

நாக்பூர்: நாடு முழுவதும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ள அனைத்து இந்துக்களுக்கும், ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

நாக்பூரில் செய்தியாளர்களிடம் இது குறித்து  அவர் பேசுகையில், முஸ்லீ்ம்களை தேச விரோதிகள் என்று தொடக்கத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ். கூறி வருகிறது. ஆனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக கைதான இந்துக்கள் அனைவருமே ஆர்.எஸ்.எஸுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர். இதற்கு ஆர்.எஸ்.எஸ். என்ன பதில் சொல்லப் போகிறது.

முஸ்லீம்கள் தீவிரவாதத்தைப் பரப்புகிறார்கள், ஆதரிக்கிறார்கள், அடைக்கலம் தருகிறார்கள் என்று கூறுகிறது ஆர்.எஸ்.எஸ். ஆனால் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கைதானால் சதி நடக்கிறது என்று கூக்குரலிடுகிறது.  நாட்டில் நிலவும் வறுமையை ஒழிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒருங்கிணைய வேண்டும். முஸ்லீம்களும் அவர்களுடன் கை கோர்த்து நாட்டை வலிமைப்படுத்த பாடுபட வேண்டும் என்றார் திக்விஜய் சிங்,

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தீவிரவாத செயலில் கைதான இந்துக்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்-திக்விஜய் சிங்"

Post a Comment