லண்டன்:அடித்துப் போட்டதுபோல அசதி, அலைச்சல்களால் ஏற்படும் சோர்வு, களைப்பு... இதிலிருந்து விடுபட கோகோ அதிகம் உள்ள சாக்லெட் உதவி செய்கிறதாம். இங்கிலாந்து ஹூல் மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்த உண்மை இது. உடல் களைப்பை போக்குவது மட்டுமின்றி தொடர் உடல்வலி, தலைவலி மற்றும் ஞாபகமறதிக்கும் இது தீர்வாக இருக்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட தகவல்கள் :
உடல் சோர்வு, தலைவலி, ஞாபக மறதி போன்ற பாதிப்புகளால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பாதிப்பு 1397967985 க்ரானிக் பேடிக் சின்ட்ரோம்’ எனப்படுகிறது. இதுபோன்ற பாதிப்புகள் உள்ள சுமார் 2 ஆயிரம் பேர் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள், ஆராய்ச்சிக்கு முன்பும் பின்பும் அனைத்துகட்ட பரிசோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டனர். தினமும் 2 கோகோ சாக்லெட் வீதம் அவர்களுக்கு கொடுக்கப்பட்டு, சுமார் 6 வார தொடர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் களைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் குறைந்து காணப்பட்டது தெரியவந்தது. இதை ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி, ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டவர்களும் உணர்ந்து கொண்டனர்.
சாக்லெட்டில், குறிப்பாக கோகோ அதிகம் உள்ளவை அசதி, உடல் வலிக்கு தீர்வாக இருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட விஷயமாம்.





0 comments: on "கோகோ சாக்லெட்... சீக்ரெட் ஆப் எனர்ஜி"
Post a Comment