தலைப்புச் செய்தி

Monday, November 22, 2010

இரட்டை கோபுரம் தகர்ப்பு: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.3125 கோடி நஷ்ட ஈடு அமெரிக்க அதிகாரி தகவல்

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இரட்டை கோபுரத்தை விமானம் மூலம் மோதி தீவிரவாதிகள் தகர்த்தனர். இதில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர்.
 
இதை தொடர்ந்து மீட்பு பணியில் சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். மேலும், தாக்கு தலில் தரைமட்டமான கட்டிட இடிபாடுகளையும் அகற்றினர்.
 
இதை தொடர்ந்து நச்சு தூசி, புகை மற்றும் இடிபாடுகளில் இருந்து வெளியான அசுத்த வாயுக்கலால் பல நோய்களுக்கு ஆளாகினர். எனவே, மீட்பு பணியில் ஈடுபட்ட தங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என இன்சூரன்சு நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
 
இதையடுத்து அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வந்தது. முடிவில் அவர்களுக்கு ரூ.3125 கோடி நஷ்ட ஈடு வழங்க இன்சூரன்சு நிறுவனம் ஒப்புக் கொண்டது.
 
இந்த முடிவை மீட்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் ஒப்புக் கொண்டன. சுமார் 95 சதவீதம் பேர் ஏற்றுக் கொண்டு அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
 
அவர்களுக்கு விரைவில் நஷ்டஈடு தொகை வழங்கப்படும். பாதிக்கப்பட்ட நோயின் தன்மைக்கு ஏற்ப இத்தொகை வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இரட்டை கோபுரம் தகர்ப்பு: மீட்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு ரூ.3125 கோடி நஷ்ட ஈடு அமெரிக்க அதிகாரி தகவல்"

Post a Comment