தலைப்புச் செய்தி

Tuesday, November 23, 2010

இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!

இந்தோனேஷியா: இந்தோனேசியாவில் கடந்த இரண்டு மாதங்களாக சீற்றத்துடன் காணப்படும் மெரபி எரிமலையின் சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள மெரபி எரிமலை கடந்த இரண்டு மாதமாக சீற்றத்துடன் குமுறிக் கொண்டிருந்தது. கடந்த 3 வாரங்களாக அந்த எரிமலை தீக்குழம்பை கக்கியதோடு, சூடான சாம்பலையும் வாயுவையும் வெளியேற்றி வருகிறது. இதனால் அந்த எரிமலை பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் இப்புகைக்கும் சாம்பலுக்கும் பலியாயினர்.

காற்றில் சாம்பல் பறப்பதால், மக்கள் சுவாசிக்க முடியாமல்  மூச்சுத் திணறலுடன் அவதிப்படுகின்றனர். சமீபத்தில் எரிமலை சரிவில் இருந்து சாம்பலில் புதையுண்ட ஏராளமான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் எரிமலை சீற்றத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உயர்ந்துள்ளது மேலும் இந்த எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "இந்தோனேஷிய எரிமலை சீற்றத்துக்கு 304 பேர் பலி!"

Post a Comment