தலைப்புச் செய்தி

Thursday, November 25, 2010

2ஜி எல்லா ஊழல்களையும் வெட்கப்பட வைத்துவிட்டது: உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் நடைபெற்ற எல்லா ஊழல்களையும் வெட்கப்பட வைத்துவிட்டது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் என்று உச்ச நீதிமன்றம் வர்ணித்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக தொலைத் தொடர்பு (முன்னாள்) அமைச்சர் ஆ.இராசா மீது வழக்குத் தொடர பிரதமர் அனுமதி வழங்க உத்தரவிடவேண்டும் என்று கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி தொடுத்த வழக்கை விசாரித்துவரும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்கூலி ஆகியோர் கொண்ட நீதிமன்ற அமர்வு, அம்மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

2ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக பொது நல வழக்கு மையத்தின் சார்பாக தொடரப்பட்ட மனு, அது தொடர்பாக மத்திய புலனாய்வுக் கழகம் மேற்கொண்டுவரும் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

மத்திய புலனாய்வுக் கழகத்திற்காக (சிபிஐ) வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், மற்ற ஊழல்களுக்கும், 2ஜி முறைகேட்டிற்கும் இடையிலான வேறுபாடுகளை எடுத்து விளக்கியபோது குறிக்கிட்ட நீதிபதிகள், “இந்த ஊழல் மற்ற எல்லா ஊழல்களையும் வெட்கித் தலைகுனிய வைத்துவிட்டது” என்று கூறினர்.

அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேட்டை எச்சரிக்கையாகவும், திறமையாகவும், வேகமாகவும் மத்திய புலனாய்வுக் கழகம் விசாரித்து வருகிறது என்று வழக்கறிஞர் வேணுகோபால் கூறினார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "2ஜி எல்லா ஊழல்களையும் வெட்கப்பட வைத்துவிட்டது: உச்ச நீதிமன்றம்"

Post a Comment