தலைப்புச் செய்தி

Thursday, September 23, 2010

உலகின் முதல் பணக்கார நாடாக கத்தர் (Qatar) தேர்வு!

மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யை வைத்து உலக நாடுகளின் செல்வ செழிப்புகளைப் பட்டியலிட்டுள்ள குளோபல் ஃபினான்ஸ் என்கிற அமெரிக்கப் பத்திரிக்கை இத்தகவலை அளித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதில் முன்னணி வகிப்பதால் அதிக வருமானம பெறும் நாடாக கத்தர் திகழ்வதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது. ஒவ்வொரு வருடமும் கத்தர் 77 மில்லியன் டன் இயற்கை எரிவாயுவை உற்பத்தி செய்கிறதாம்.

90,149 டாலர்கள் GDP மதிப்பு கொண்டுள்ள கத்தர் பல வருடங்களாக முதல் இடத்தில் இருந்த லக்செம்பெர்க்கை இந்த ஆண்டு முந்தி முதலிடம் பெற்றுள்ளது. 79,411 டாலர்கள் மத்திபுள்ள லக்செம்பெர்க் இந்த ஆண்டு இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

மூன்றாவது இடத்தை நார்வே பெற்றுள்ளது (GDPமதிப்பு 52,964 டாலர்கள்)

மற்ற நாடுகளின் விவரங்கள்:

நான்காம் இடம் : சிங்கப்பூர் (GDPமதிப்பு 52,840 டாலர்கள்).

ஐந்தாவது இடத்தை தென்கிழக்காசிய நாடான புரூனை (GDPமதிப்பு 48,714 டாலர்கள்)பெற்றுள்ளது.

ஐக்கிய அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகியன் ஆறில் இருந்து பத்தாவது இடங்களைபெற்றுள்ளன.

அரபுநாடுகளில் கத்தாரை அடுத்து குவைத்  நாடு பட்டியலில் 14ஆம் இடத்தில் இருக்கிறது. அதன் GDPமதிப்பு 38,984 டாலர்கள் . 36,167 டாலர்கள் GDPமதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரகம் 18 வது இடத்தை பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

இந்தியா இந்த பட்டியலில் தனக்கு மேல் 127 பணக்கார நாடுகளைப் பெற்றுள்ளது.

உள்நாட்டுப் போரால் வளர்ச்சி தடைபட்டிருக்கும் ஸ்ரீ லங்கா கூட 113 ஆம் இடத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "உலகின் முதல் பணக்கார நாடாக கத்தர் (Qatar) தேர்வு!"

Post a Comment