டெல்லி,செப்.5:கட்சியின் வளர்ச்சிக்காக நிதி திரட்ட பா.ஜனதா புது வியூகம் வகுத்துள்ளது. ஆயுட்கால நன்கொடையாக ரூ.1 லட்சம் வசூல் செய்கிறார்கள்.
அரசியல் கட்சிகள் கட்சியை வளர்க்க தேவைப்படும் நிதியை தொண்டர்களிடம் வசூல் செய்வது வாடிக்கை. பா.ஜனதா கட்சி நிதி திரட்டுவதிலும் புதிய முறையை செயல்படுத்தி உள்ளது. இதன்படி நாடுமுழுவதும் ஆயுட்கால நன்கொடையாளர்களை சேர்க்கிறார்கள்.
இத்திட்டத்தில் சேர ஆயுட் கால நன்கொடையாளர்கள் ரூ.1 லட்சம் நிதி கொடுக்க வேண்டும். அவ்வாறு திரட்டப்படும் நிதி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு அதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகை கட்சி வளர்ச்சி நிதிக்கு எடுத்து கொள்ளப்படும்.
'ஆஜிவான் சயோக் நிதி' என்று பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் ஏராளமான நன்கொடையாளர்களை சேர்த்து நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர். இது தவிர கட்சி தொண்டர்களும் ரூ.1,000, 5,000 மற்றும் ரூ.10,000 வருடாந்திர நிதியாக செலுத்தலாம்.
இத்திட்டத்தின் மூலம் நிதி கிடைப்பதுடன் கட்சிக்கு கொள்கை பிடிப்புள்ள ஏராளமான தொண்டர்களும் கிடைப்பார்கள் என்று பா.ஜனதா கருதுகிறது.
0 comments: on "கட்சியின் வளர்ச்சிக்காக நிதி திரட்ட பா.ஜனதா புது வியூகம்"
Post a Comment