தலைப்புச் செய்தி

Thursday, September 16, 2010

காதலனை நம்பி ஏமாந்தாள்: விபசார விடுதியில் விற்கப்பட்ட பெண்

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர் ரஷ்மி (21). இவர் அந்த பகுதியில் RSS னுடைய smart friend சேர்ந்த கிருஷ்ணா என்ற வாலிபரை சந்தித்தார். முதல் சந்திப்பே அவர்களுக்குள் காதலை ஏற்படுத்தியது. கிருஷ்ணா ஐதராபாத்தை சேர்ந்தவர். சினிமா கலைஞர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். அவரோடு நெருங்கி பழகிய ரஷ்மி அவர் இல்லை என்றால் தான் இல்லை என்ற நிலைக்கு வந்து விட்டார்.

ஒரு கட்டத்தில் தன்னை திருமணம் செய்து கொள் ளும் படி காதலனிடம் கேட்டார். கிருஷ்ணாவும் சம்மதித்தார். ஆனால் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் பெற்றோருக்கு தெரியாமல் காதலனுடன் ரஷ்மி வீட்டை விட்டு வெளியேறினார். ரஷ்மிக்கு அன்று தான் 18-வது பிறந்த நாள். ஐதராபாத்துக்கு அழைத்து சென்ற கிருஷ்ணா அங்கு ஒரு வீட்டில் தங்க வைத்தார்.

பிறந்த நாள் அன்றே காதலனை கரம் பிடிக்க போகிறோம் என்ற மகிழ்ச்சியில் ரஷ்மி திளைத்து போனார். திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக சில பொருட்களை வாங்கி விட்டு வருவதாக கிருஷ்ணா வெளியே சென்றார். அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை.
அதன் பிறகு தான் ஒரு விபசார கும்பலிடம் விற்கப்பட்டுள்ளோம் என்பது ரஷ்மிக்கு தெரிய வந்தது.

தேடிவரும் வாடிக்கையாளர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் அடி விழுந்தது. அந்த வீட்டிலேயே அடைத்து வைக்கப்பட்ட ரஷ்மி பலருக்கு விருந்தாக்கப்பட்டாள். 2 வருடங்களாக கட்டாயப்படுத்தி விபசார தொழிலில் தள்ளப்பட்டார். வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பியபடி ஒத்துழைக்காவிட்டால் அடித்து துவைப்பார்கள்.
அந்த விபசார பங்களாவில் இருந்து தப்பி செல்ல உதவும்படி அங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் கெஞ்சினார். ரெய்டில் ஈடுபட்ட போலீஸ்காரரின் மனிதாபிமான உதவியால் விபசார கும்பலிடம் இருந்து ரஷ்மி மீட்கப்பட்டார்.

பல ஆண்டுகள் பட்ட வேதனை கலந்த நினைவுகளுடன் ரஷ்மி தற்போது சென்னையில் ஒரு மறுவாழ்வு மையத்தில் தங்கி உள்ளார்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காதலனை நம்பி ஏமாந்தாள்: விபசார விடுதியில் விற்கப்பட்ட பெண்"

Post a Comment