தலைப்புச் செய்தி

Thursday, September 9, 2010

திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செய்துவருகின்றனர்.


இந்த தொழுகையின் போது கிராம ஜமாத்தாருக்கும், தவ்ஹித் ஜமாத்தாருக்கும் இடையே தொழுகை முறையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது.

இதனால் பொது இடத்தில் தனியாக தொழுகை நடத்துவதற்கு தவ்ஹித் ஜமாத்தார் ஏற்பாடு செய்துவந்தனர்.

இது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கிராம ஜமாத்தார்கள், தவ்ஹித் ஜமாத்தார் நிர்வாகிகளிடம் கேட்டபோது மீண்டும் மோதல் வரும் சூழல் ஏற்பட்டது.

இதனால் நேற்று தவிஹித் ஜமாத் பிரமுகர்கள்,கிராம ஜமாத்தாரை நேரில் சந்தித்து விவாதித்தபோது விவாதம் முற்றி கைகளப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த கைகளப்பு இரவு வரை நீடித்துள்ளது. தொடர்ந்து தவ்ஹித் ஜமாத்தாருக்கு ஆதரவாக வந்த திருமங்களக்குடி ஹாஜி முகம்மது, பிரச்சனை பெரிதானதும் தனது இரு கைத்துப்பாக்கியை எடுத்து எதிரில் நின்ற கிராம ஜமாத்தார் மீது 12 முறை சுட்டிருக்கிறார்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் கிராம ஜமாத் தலைவர் முகமது இஸ்மாயில், கமிட்டி உறுப்பினர் ஹச்முகமது ஆகிய இருவர் பலியானார்கள்.

5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தால் இருதரப்பினருக்கும் இடையே மேலும் மோதல் முற்றியுள்ளது. இந்த மோதலால் 10க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கலவரத்தை கட்டுப்படுத்த எஸ்.பி.மூர்த்தி தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.





Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்பு"

Post a Comment