வாஷிங்டன் - செப்டம்பர் 11 அன்று நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு இஸ்லாமே காரணம் என்று கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வெள்ளை மாளிகை முன்பு கூடி குரானிலிருந்து சில பக்கங்களை கிழித்தெறிந்த ஆறு கிறிஸ்துவர்களை காவல்துறை கைது செய்தது.
கைது செய்யப்பட்ட ஆறு நபர்களில் ஒருவரான அபார்ஷன் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவரான ரண்டால் டாரி இஸ்லாம் அமைதி மார்க்கம் எனும் பிரசாரத்தை நிறுத்துவதற்காகவே தாம் இம்முயற்சியை மேற்கொண்டதாக கூறினார். ஆன்ட்ரு பெக்கம் எனும் இன்னொரு நபர் குரானில் கிறித்துவர்கள் மற்றும் யூதர்கள் குறித்து கூறப்படும் குரான் வசனங்களை படித்து காட்டி அப்பக்கங்களை கிழித்தார்.
மேலும் இரட்டை கோபுர தாக்குதலுக்கு குரானின் போதனைகளே காரணம் என்றும் கூறினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர்களை குறித்து கொண்ட காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்த எம்முயற்சியும் எடுக்கவில்லை. செப்டம்பர் 11 நினைவு தினத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா அமெரிக்கா மேல் இஸ்லாம் போர் தொடுக்கவில்லை, மாறாக அல் காயிதாவே என்று கூறினார்.





0 comments: on "வெள்ளை மாளிகை முன் குரானின் பக்கங்களை கிழித்த கிறிஸ்தவர்கள்"
Post a Comment