சிதம்பரம் எம்.கே. தோட்டத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தன். இவரது மகன் சதீஷ்குமார், திரைப்பட இசையமைப்புக் குழு ஒன்றில் கிபோர்டு வாசிப்பாளராக உள்ளார். இவருக்கும் சிதம்பரத்தை அடுத்த கீழவன்னியூரைச் சேர்ந்த செல்வராஜ் மகள் பத்மாவதிக்கும் திருமணம் நேற்று சிதம்பரம் கோவிலில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி இரு வீட்டாரின் உறவினர்கள் மற்றும் நண்பவர்கள் திருமண விழாவில் பங்கேற்க கோவிலுக்கு வருகை தந்தனர். திருமணம் நேரம் நெருங்கும் வரை பெண்ணின் தகப்பனார் கைலியோடு (லுங்கி) இருந்ததால், மாப்பிள்ளை உறவினர்கள் கிண்டல் செய்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு முக்கிய பிரமுகர்கள் வருகை தர உள்ள நேரத்தில் கைலியோடு இருப்பதா என்றும், வேட்டி கட்டிவர வேண்டும் என்றும் மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர்.
இதற்கு பெண் வீட்டார் எங்களுக்கும் நாகரீகம் தெரியும். இவ்வளவு செலவு செய்து பெண்ணை கட்டிக் கொடுக்கும் எங்களுக்கு வேட்டி கட்டத் தெரியும் என்று பேசியுள்ளனர்.
திருமணத்துக்கு முன்பே பெண் வீட்டார் வரம்பு மீறி பேசுவதால், இந்த திருமணம் வேண்டாம் என்று மாப்பிள்ளையும், மாப்பிள்ளை தகப்பனாரும் கோவித்துக் கொண்டு கோவிலைவிட்டு வெளியேறினர். பின்னர் அவர்களை திருமணத்துக்கு வந்தவர்கள் சமாதானம் செய்த முயற்சியும் தோல்வி அடைந்தது. இதையடுத்து இருதரப்பினரும், சிதம்பரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். போலீசார் சமரச முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
கைலி கட்டியதால்தான் திருமணம் நின்று விட்டதா என்று ஆச்சரியப்படுகின்றனர் சிதம்பரம் பகுதி மக்கள்.
0 comments: on "கைலி கட்டியதால் நின்றுபோன திருமணம்"
Post a Comment