தலைப்புச் செய்தி

Thursday, September 2, 2010

தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு வினோத வழக்கு

பெங்களூர்: மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை ஹரி பாசம்மா (வயது 70). இவர் பெங்களூர் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,முதுமையில் இருக்கும் என்னை கவனித்து கொள்ள எனக்கு வாரிசுகள் யாரும் இல்லை. உறவினர்களும் இல்லை. இடுப்பு வலியால் அவதிப்படுகிறேன். மூட்டு வலியும் உள்ளது. நீரிழிவு நோயாளி.

இதனால் ஒவ்வொரு நாளும் மரணத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனவே நான் ஒரேடியாக இறந்து விட முடிவு செய்து உள்ளேன். நான் மரணத்தை சந்தோஷமாக வரவேற்கிறேன். எனவே நான் இறப்பதற்கு அனுமதி தர வேண்டும்.

தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால் நான் சட்டத்தை மீற விரும்பவில்லை. எனவே நான் இறப்பதற்கு சட்ட ரீதியாக அனுமதி தரவேண்டும். விஷ ஊசி போன்றவற்றை கொடுத்தால் அதன் மூலம் உயிரை விட தயாராக இருக்கிறேன்.

இவ்வளவு கஷ்ட நிலையிலும் நான் உலகுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனக்கு பலர் உதவி செய்வதாக கூறுகிறார்கள். ஆனாலும் என் வலியையும், அவதியையும் நான்தானே தாங்கி கொள்ள வேண்டும். அது என்னால் முடியவில்லை. எனவே அனுமதி கொடுங்கள். இவ்வாறு அவர் மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டார். அவருக்கு இருக்கும் நோயை குணப்படுத்த முடியுமா? என்று டாக்டர்கள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவில் கூறியுள்ளார். ஹரிபாசம்மா இதே கோரிக்கையை வலியுறுத்தி ஏற்கனவே மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதற்கு எந்த பதிலும் இல்லாததால் ஐகோர்ட்டை நாடியுள்ளார்.


Source:இன்னேரம்
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தற்கொலை செய்து கொள்ள அனுமதி கேட்டு வினோத வழக்கு"

Post a Comment