இந்த வழக்கில் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும், யாரும் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடாமல், அமைதி காக்க வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தீர்ப்பு வெளியாவதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அயோத்தி தீர்ப்பையொட்டி பல்க் எஸ்எம்எஸ் அனுப்ப 3 நாட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக எஸ்எம்எஸ், எம்எம்எஸ் அனுப்ப வரும் சனிக்கிழமை வரை நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தவறான வதந்திகள் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
0 comments: on "அயோத்தி தீர்ப்பு: 3 நாட்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பத் தடை"
Post a Comment