காஞ்சிபுரம், செப். 11: சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் உள்ள அகில இந்திய குடிமைப்பணித் தேர்வு பயிற்சி மையத்தில் சேருவதற்கு வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்ட அறிக்கை:
இயங்குநர் மற்றும் பயிற்சி துறை தலைவர், அண்ணா மேலாண்மை நிலையம் அவர்களின் கட்டுப்பட்டின் கீழ் அண்ணா நகரில் இயங்கும் அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுப் பயிற்சி மையத்தில் இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி மற்றும் மத்திய குடிமைப் பணிகளுக்காக உளச்சார்பு தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளன.
இப் பயிற்சியில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மற்றும் இதர வகுப்பைச் சேர்ந்த குறைந்த பட்சம் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
இப் பயிற்சிக்கு மாணவர்களை சேர்க்கும் பொருட்டு அக்டோபர் 31-ம் தேதி நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இத் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்ற மாணவர்கள் அகில இந்திய குடிமைப் பணி தேர்ச்சி மையத்தின் முதல்வருக்கு வரும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்த நுழைவுத் தேர்வுகள் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம், வேலூர், சிதம்பரம், தஞ்சாவூர், தர்மபுரி மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் நடைபெறும் என்றார்.
0 comments: on "15-க்குள் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்"
Post a Comment