சிலர் கவர்ச்சியாகப் பேசுவார்கள். ""என் புத்திமதியைக் கேட்டு நடந்து, இந்த ஊரில் நல்லபடியாக வாழ்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா?'' என்று பெருமையடித்துக் கொள்வார்கள்.உதாரணத்துக்கு ஒரு நண்பர், ""உன் மனைவியோட ஒழுங்கா குடித்தனம் நடத்து! அவள் கேட்டதை வாங்கிக் கொடு. குடிச்சிட்டு வீட்டுக்குப் போகாதே. புகை பிடிக்காதே. அது உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் ஏண்டா செய்றே' என தன் இன்னொரு நண்பரை எச்சரிப்பார். ஆனால், உபதேசம் செய்தவரின் வீட்டில் போய் பார்த்தால், கதை வேறு மாதிரியாக இருக்கும். காரணம்இல்லாமல், மனைவியை உதைப்பது, குடிப்பது...இப்படி நேர்மாறாக நடப்பார்.ஊருக்கு உபதேசம் செய்யும் இந்தப் பாவிகளுக்கு கொடிய நரகம் காத்திருக்கிறது என எச்சரிக்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.""இப்படி அறிவுரை சொன்னவன் நரக நெருப்பில் தூக்கி எறியப்படுவான். அவனது குடல் வெளிப்பட்டு நெருப்பில் விழும். பிறகு, அக்குடலை எடுத்துக் கொண்டு அவன், கழுதை தன் செக்கில் சுற்றுவதைப் போல நரகத்தில் சுற்றுவான். இதைப் பார்த்து இவனிடம் அறிவுரை பெற்றவர்கள் "நீ நல்லவனாகத்தானே இருந்தாய். நல்லதைத் தானே எங்களுக்குப் போதித்தாய். பிறகு ஏன் உனக்கு இந்தக் கதி ஏற்பட்டது?' எனக் கேட்பார்கள்.அதற்கு அவன் "நான் உங்களுக்கு நல்லதைத்தான் போதித்தேன். ஆனால், நல்லதின் அருகில் கூட நான் சென்றதில்லை. தீமைகளை விட்டும் உங்களைத் தடுத்தேன். ஆனால், நான் தீமை புரிந்து கொண்டிருந்தேன்' என்று பதிலளிப்பான்,'' என்று நாயகம்(ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.ஊருக்கு உபதேசம் செய்வது எளிது. அந்த உபதேசத்தை சொல்பவரும் கடைபிடித்தால் தான், ரமலான் நோன்பு நோற்றதின் பயனை அல்லாஹ்விடம் பெற முடியும்
0 comments: on "ஊருக்கு மட்டும் உபதேசமா?"
Post a Comment