புதுடெல்லி,ஆக29:பாப்ரி மஸ்ஜித்-ராம ஜென்மபூமி வழக்கினை நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பிரச்சனைக்கு தீர்வுக்காண வேண்டும் என பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கை குழு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அடுத்தமாதம் பாப்ரி மஸ்ஜித் தொடர்பான வழக்கு ஒன்றின் தீர்ப்பை அலகபாத் உயர்நீதிமன்றம் கூறவிருக்கும் நிலையில்தான் இவ்வமைப்பு பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மூத்த பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியுடனும் இதர தேசிய தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வுகாண முயற்சிப்போம் என அவ்வமைப்பின் செயர்மென் ஜாவேத் ஹபீப் தெரிவித்துள்ளார்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்
0 comments: on "அயோத்தியா பிரச்சனை:நீதிமன்றத்திற்கு வெளியே தீர்க்க பாப்ரி மஸ்ஜித் ஆக்ஷன் கமிட்டி கோரிக்கை"
Post a Comment