பாக்தாத், ஆக.25: இராக்கின் 10 நகரங்களில் போலீஸôரை குறிவைத்து பயங்கரவாதிகள் புதன்கிழமை நிகழ்த்திய கார் குண்டுவெடிப்பில் 52 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயமடைந்தனர்.
இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வரும் நிலையில், மீண்டும் தீவிரவாதிகள் பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.
14 கார் குண்டுகளை பயன்படுத்தி இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இராக்கில் இருந்து முழுவதுமாக அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற வலியுறுத்தியே இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
தென்கிழக்கு பாக்தாதில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம் அருகே நடந்த குண்டுவெடிப்பில் 15 போலீஸôர் உள்பட 20 பேர் இறந்தனர்.
90 பேர் காயமடைந்தனர். காஹிரா பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments: on "இராக்கில் 10 இடங்களில் குண்டுவெடிப்பு: 52 பேர் பலி"
Post a Comment