தலைப்புச் செய்தி

Thursday, November 11, 2010

காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் திடீர்த் தாக்குதல்

கடந்த புதன்கிழமை (10.11.2010) காஸாவின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ரஃபா நகரை இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை சுற்றிவளைத்துக் கொண்டது.

எட்டு இராணுவ வாகனங்கள், புல்டோஸர்கள் சகிதம் பலஸ்தீனர்கள் அதிகமாக வசிக்கும் ரஃபாவில் உள்ள நதா குடியிருப்பைச் சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம், அங்கிருந்த பலஸ்தீன் வீடுகளை நோக்கி சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது. இதேவேளை, இஸ்ரேலிய யுத்த விமானங்கள் அப்பகுதி வான்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதன்கிழமை அதிகாலையில், காஸாவின் வடபிராந்தியத்தில் உள்ள பெய்ட் ஹனூன் கடவையருகே சரளைக் கற்களைப் பொறுக்குவதில் ஈடுபட்டிருந்த 28 வயதான பலஸ்தீன் கூலித் தொழிலாளி ஒருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினரால் சுடப்பட்டு அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பாவிப் பலஸ்தீனர்கள் மீதான இத்தகைய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் 2009 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகின்றன எனக் குறிப்பிட்ட மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் ஆதம் அபூ ஸல்மியா, சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் மாத்திரம் இதுபோன்ற 66 துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காஸாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையின் திடீர்த் தாக்குதல்"

Post a Comment