ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கெதிராக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு செயல்படுவதாகக் கூறி அந்த இயகத்தின் சார்பில் இன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. டில்லியில் நடைபெற்ற தர்ணா போராட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார்.
இந்தப் போராட்டத்தில் பேசிய பகவத் அண்மையில் அஜ்மீர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இந்திரேஷ் குமாருக்கும் குண்டு வெடிப்புக்கும் எந்த சம்பந்தமுமில்லை என தெரிவித்தார்.இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்களில் யாரும் எங்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் இல்லை என அவர் கூறினார்.
மேலும் அவர் 2003 ஆம் ஆண்டு முதல் இந்துத் துறவிகளுக்கு எதிராக சதித்திட்டம் அரங்கேற்றப்பட்டு இந்துக்களை களங்கப்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினார். அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது ஆர்எஸ்எஸ் இயக்கத்தையும் களங்கப்படுத்த முனைகின்றனர், ஆனால் எங்கள் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையே அகிம்சைதான் என மோகன் பகவத் தெரிவித்தார்.
ஆர்எஸ்எஸ்ஸின் எதிர்ப்பதம்தான் வன்முறை என இந்த தர்ணா போராட்டத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.





0 comments: on "ஆர்எஸ்ஸை களங்கப்படுத்த சதி - மோகன் பகவத் கதறல்"
Post a Comment